கல்லடி –உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா

(லியோன்)

  
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு - கல்லடி –உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின்  வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு கல்லூரி அதிபர் எஸ் .தாயாபரன்  தலைமையில் (13) பிற்பகல் பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது
.

நடைபெற்ற  வருடாந்த பாடசாலை பரிசளிப்பு  தின நிகழ்வில் மாணவர்களின்  கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் ,ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை , கல்வி பொது தர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில்  சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு  பரிசில்களும் , சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .

இந்த பரிசளிப்பு நிகழ்வில்  ஆன்மீக அதிதியாக கல்லடி ராமகிருஷ்ணன் மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரமானந்தஜி மகராஜ் , பிரதம விருந்தினராக சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவனும் ,சிங்கபூர் யொங் லோ லிங் தேசிய பல்கலைக்கழக மருத்துவப் பீட இணைப் பேராசிரியாருமான  கலாநிதி திருமா வி .வி ஆறுமுகம் ,,கௌரவ அதிதியாக சிவானந்தா பாடசாலையின் பழைய மாணவனும் ,மட்டக்களப்பு  வலயக் கல்விப் பணிப்பாளருமான கே . பாஸ்கரன் , சிவானந்தா பாடசாலை பழைய மாணவ சங்க தலைவர் எம் .முருகவேல் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் எம் .மங்களேஸ்வரன் ,கல்லடி உப்போடை ஸ்ரீ சித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலய தலைவர் எஸ் .சந்திரகுமார் மற்றும்  பாடசாலை  ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர் , பாடசாலை  அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்