மண்டூர் குறுமண்வெளி பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு.



(மண்டூர் நிருபர்) மண்டூர் - குறுமண்வெளி பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(14) பி.ப 2.00 மணியளவில் மண்டூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்றது.

ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைய பாராளுமன்ற சபைத் தலைவரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல அவர்களினால் அடிக்கல் நடப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 8000 மில்லியன் செலவில் 05 பாலங்கள் அமைப்பதற்காக தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சினால் நடை முறைப்படுத்தப்ட்டுள்ள நிலையில் 1000 மீற்றர் நீளமான  மண்டூர்ப் பாலமானது 1400 மில்லியன் செலவில் அமைக்கப்பட வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள்  பிரதி அமைச்சரும்  பட்டிருப்புப் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளர் எஸ்.கணேசமூர்த்தி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான ஞா.ஸ்ரீநேசன்,  எஸ்.யோகேஸ்வரன் (பா.உ), கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமிர்அலி மற்றும்  செய்யட் அலி சாஹீர் மெளலானா(பா.உ),மண்டூர் கிராம அபிவிருத்தி முன்னேற்றச் சங்க உறுப்பினர்கள், ஆலயத் தலைவர்கள், விளையாட்டுக்  கழக உறுப்பினர்கள், புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Add caption


Add caption


Add caption




Add caption