இருதயபுரம் கிழக்கு மாநகர சபை பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி நிகழ்வு

(லியோன்) 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு மாநகர சபை பாலர்  பாடசாலையில்  சர்வதேச சிறுவர்  தினத்தை சிறப்பிக்கும் வகையில் சிறார்களின் விளையாட்டு  போட்டி  நிகழ்வுகள்  மட்டக்களப்பு மாநகர சபை பிரதி ஆணையாளர் என் .தனஞ்சயன்  தலைமையில் சிறப்பாக பாடசாலையில் (12) பிற்பகல் நடைபெற்றது
.

ஆரம்ப நிகழ்வாக சிறார்களினால் அதிதிகள் வரவேற்கப்பட்டனர் , அதனைதொடர்ந்து பாடசாலை கொடி ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் சிறார்களின் நிகழ்வுகள் ஆரம்பமானது .

நிகழ்வில் சிறார்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றதுடன்  இவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது .


இந்நிகழ்வில்  பாடசாலை ஆசிரியர்கள் ,பாடசாலை  சிறார்கள் பெற்றோர்கள் பிற்பகல் என பலர் கலந்து சிறப்பித்தனர்