மட்டு- ஊறணி சரஸ்வதி வித்தியாலய பரிசளிப்பு விழா


(லியோன்)

மட்டக்களப்பு  கல்வி  வலயத்திற்குட்பட்ட   மட்டக்களப்பு ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின்  2015/2016 ஆண்டுக்கான  பரிசளிப்பு   நிகழ்வுகள் பாடசாலை   அதிபர் . எம் யோகானந்தராஜா  தலைமையில்   ஊறணி அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் (12) பிற்பகல்  நடைபெற்றது


ஆரம்ப   நிகழ்வாக  மாணவர்களினால்  அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து  பிராதன மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

தொடர்ந்து  மங்கள  விளக்கேற்றப்பட்டு   இறைவணக்கத்துடன் தமிழ்மொழி வாழ்த்து பாடப்பட்டது .இதனை தொடர்ந்து 2015/2016 ஆண்டுக்கான  பரிசளிப்பு நிகழ்வும் ,அதிதிகளின் சிறப்புரைகளும் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவருமான ஞா .ஸ்ரீநேசன் , விசேட அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே .கருணாகரன் ,கௌரவ அதிதியாக மண்முனை வடக்கு ஓய்வு நிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் மற்றும் நிகழ்வில் பாடசாலை  ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்கள் ,பாடசாலை  அபிவிருத்தி  குழு  உறுப்பினர்கள்  என பலர் கலந்து சிறப்பித்தனர் .