சிறுவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு முக்கியமானது.


(பழுகாமம் நிருபர்)
சிறுவர்களின் வளர்ச்சியில் பெற்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். பட்டிருப்பு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சி முன்னாள் தலைவருமான  சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் நினைவு தினத்தில் பழுகாமம் விபுலானந்த சிறுவர் இல்ல மாணவர்களின் வளர்ச்சிக்கு ஒருதொகை நிதியினை வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் உரையாற்றுகையில், 

சிறுவர்கள் சிறுவயதிலே பெற்றோரை இழந்து வாழ்வதென்பது ஜீரணிக்க முடியாத ஒரு வேதனையான விடயமாகும். இவ்வாறு பெற்றோர்களினால் சிறு வயதில் கைவிடப்பட்ட பலரை இன்று நாம் இழந்து நிற்கின்றோம்.  அவ்வாறான இந்த சிறுவர்களை தங்களின் குழந்தைகளை போன்று இந்த இல்லங்கள் வளர்த்து சமூகத்திற்கு ஒரு நற்பிரஜையாக கொடுப்பதென்பது ஒரு சாதாரண விடயமல்ல. அந்த கைங்கரியமான செயலை பல வருடமாக இல்லப்பொறுப்பாளர்கள் செய்து வருகின்றார்கள். அவர்களை பாராட்ட வேண்டும்.

பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவர்கள்  இளம் வயதிலே தடம்மாறிப் போகின்ற சந்தர்ப்பத்தை இந்த சிறுவர் இல்லங்கள் இல்லாமல் செய்கின்றன. இவ்வாறான குழந்தைகளை பராமரிப்பதற்கும் அவர்களை பாதுகாத்து நற்பிரஜைகளாக சமூகத்தோடு இணைப்பதற்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற தனவந்தர்களும் முன்வந்து உதவி புரிய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Add caption