கல்குடா மதுபானசலை வாயிலை மூடி பொதுமக்கள் அர்ப்பாட்டம்

சர்ச்சைக்குள்ளான கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபானதொழில்சாலை வாயிலை மூடி இன்றைய தினம் தொழிலாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்குடா மதுபானசாலையில் தாங்கள் வேலை செய்தபோதும் கடந்த 7ம் மாதத்தில் இருந்து தங்களை வேலையில் இருந்து நிறுத்தியிருந்த நிலையில் தாங்கள் வேலை செய்த சுமார் மூன்று மாதங்களுக்குரிய பணங்கள் குறித்த கம்பனியின் வேலைகளை முன்னெடுத்தச் செல்லும் அட்சஸ் கம்பனி வழங்கவேண்டிய தொகையை இழுத்தடிப்பு செய்திருந்த நிலையில் இன்றைய தினம் ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மெண்டிஸ் கம்பனியின் பிரதான வாயிலை மூடிய நிலையில் குறித்த இடத்திற்கு வருகைதந்த  கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதரிகாரி மற்றும் கலகத்தடுப்பு பொலிசார் வருகைதந்து பொதுபோக்குவரத்துக்கு இடையூறு விளைக்கவேண்டாம் என கேட்டுக் கொண்டமைக்கு அமைய பாதை திறக்கப்பட்டது.

இருந்ததுபோதும் குறித்த மெண்டிஸ் மதுபான உற்பத்தி தொழில்சாலைக்குள் வேலை செய்யவந்த அட்சஸ் நிறுவன ஊழியர்களை தடுத்துநிறுத்தி தங்களின் பணத்தினை வழங்கினால் மாத்திரம் உள் நுளைய அனுமதிக்கப்படும் என பல மணி நேரங்களாக அனைவரையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்துவைத்திருந்தனர்.

இதன் பின்னர் உடனடியாக இந்தியாவில் இருந்து வருகைதந்து வேலை செய்யும் தொழிலாளிகளையும் வெளியேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததையடுத்து உடனடியான இந்தியர்கள் அனைவரும் வேலைத்தளத்தில் இருந்து வெளியேறினர்.

இதன் பின்னர் தங்களின் பணங்கள் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் உரிய கம்பனியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்ததினை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதன்போது ஒருவருக்கு 48 இலட்சம் மற்றும் 8 இலட்சம் தொகைகள் வழங்கவேண்யடி நிலையில் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிந்தமை குறிப்பிடத்தக்கது.