மட்டு பழுகாமம் தேசிய மட்ட கபடியில் முதலிடம்.மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய 17வயது பெண்கள் அணியினர் தேசிய மட்ட கபடிப்போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இறுதிப்போட்டி பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்திற்கும் பண்டதரிப்பு ஜெசிந்தா மகா வித்தியாலயத்திற்கும் இடம்பெற்றதில் 30 – 23 எனும் புள்ளி அடிப்படையில் வெற்றியை பெற்று மட்டு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், பயிற்றுவித்த ஆசிரியர் இ.புவேந்திரகுமார்(புவி) மற்றும் கி.கிருஷ்ணராஜன் ஆகியோருக்கும் வெற்றி மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை அதிபர் சு.உதயகுமார் தெரிவித்துள்ளார்.   கடந்த வருடம் வெள்ளி பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.