பால்நிலை பழமை வாதத்தை ஒழித்தல் கருப்பொருளில் பயிற்சி பட்டறை

(லியோன்)

பால்நிலை பழமை வாதத்தை ஒழித்தல் எனும் கருப்பொருள் அடங்கிய ஒரு நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது  
.

த கிராஸ் ரூடேட் அமைப்பினால் இலங்கையில் 14 மாவட்டங்களில் எச் ஐ வி பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தடையாக உள்ள கலங்கப்பாடுகள் , பால்நிலை நோக்கிய வன்முறை ,இலங்கையில் இணையத்தினூடான சுரண்டல் வன்முறைகள்  தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகின்றன .

இதன் கீழ் பால்நிலை பழமை வாதத்தை ஒழித்தல் எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட தேவை நாடும் மகளீர் அமைப்பின் ஏற்பாட்டில் ஒரு நாள் பயிற்சி பட்டறை மட்டக்களப்பில் நடைபெற்றது  .

எச் ஐ வி பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு தடையாக உள்ள கலங்கப்பாடுகள் , பால்நிலை நோக்கிய வன்முறை ,இலங்கையில் இணையத்தினூடான சுரண்டல் வன்முறைகள் போன்ற கருப்பொருளில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது .


மட்டக்களப்பு மாவட்ட தேவை நாடும் மகளீர் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சங்கீதா தர்மரஞ்சன்   ஒழுங்கமைப்பில் நடைபெற்ற  பயிற்சி பட்டறையில் வளவாளர்களாக  த கிராஸ் ரூடேட் அமைப்பின்  ஹன்ஸ் பில்லிமொறி , தாரணி ஞானபிரகாசம் , பாலித விஜய பண்டார  ஆகியோர் கலந்துகொண்டதுடன் இந்த  பயிற்சி பட்டறையில்  பல்கலைக்கழக ஊடக கற்கை நெறிக்கான மாணவர்கள் , மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் உறுப்பினர்கள் ,ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்