மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகள்.

(மண்டூர் நிருபர்)கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவ நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ  இன்று(06)இடம்பெற்றது.
          இத்தீர்த்தம் பிதிர்க்கடன் தீர்த்தமாகும்.மேலைத்தேய ஆட்சிக்காலத்தில் படைகள் இவ்வாலயத்தை அழிக்க முற்பட்டபோது முருகப்பெருமான் குழவிப்படையால் அவர்களை எதிர்த்து சென்றபோது அப்படைகள் தாங்கள் கொண்டு வந்த ஆயுதங்கள் அனைத்தையும் விட்டுச் சென்று தப்பியோடியதாக வரலாற்றுக் கதையொன்று உள்ளது.அச்சான்றுகள் தற்பொழுதும் ஆலயத்தில் உள்ளது அத்துடன் மண்டூர் முருகனுக்கு தெற்கு நோக்கிய பார்வை இருப்பது கவனிக்கத்தக்கது.இயம கண்டத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே இந்நிலை என  கூறப்படுகின்றது.
    இவ்வுற்சவ காலக்கிரிகைகளில் ஈடுபடும் கப்புகனார் மற்றும் ஆரத்திப் பெண்கள் தீர்த்தோற்சவம் முடிந்து சுவாமி ஆலயத்திற்குச் சென்று மயங்கி உணர்விழத்தலும் பின்னர் பெருமானின் மூல தீர்த்தம் பருகி உணர்வு பெறுகின்ற காட்சி மெய் சிலிர்க்கச் செய்யும் நிகழ்வாக இடம் பெற்றமை விஷேட அம்சமாகும்.