(லியோன்)
மட்டக்களப்பு திராய்மடு பகுதியில்
இன்று வியாழக்கிழமை அதிகாலை புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக
மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு
நோக்கி வந்த கடுகதி புகையிரதத்தில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார்
தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு
திராய்மடு 4 ஆம் குறுக்கு
வீதியை சேர்ந்த தங்கராஜா சதாகரன் (35வயது) இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே
இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். .
இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு
குற்றத்தடவியல் பிரிவு பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிஸார்
மேற்கொண்டுவருகின்றனர்..