பெண் ஒருவரின் தாலிக்கொடி கொள்ளையர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளது

(லியோன்)

மட்டக்களப்பு சத்துருகொண்டான் பகுதியில் (12)   மாலை பெண் ஒருவரின் தாலிக்கொடியினை கொள்ளையர்கள் அறுத்து சென்றுள்ளதாக பொலிசார்  தெரிவித்தனர் 


மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு சமுர்த்தி வங்கியில்  கடமை புரியும்  சமுர்த்தி உத்தியோகத்தார் ( திருமதி சாந்தலிங்கம் ஜெயபதி ) கடமை முடிந்து மாலை வீடு செல்லும் வழியில் கொள்ளையர்கள் அவரின்  ( 5 ½  பவுண்) சுமார் மூன்று இலட்சம் ரூபா  பெறுமதியான  தாலிக்கொட்டியினை அறுத்து  சென்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

குறித்த சம்பவம் மட்டக்களப்பு பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட   சத்துருகொண்டான் பகுதியில் (12) மாலை 04.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .


சம்பவம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார்   மேற்கொண்டு வருகிறனர்