மாவட்ட குற்றச் செயல் ஆய்வு கூட வருடாந்த பரிசோதனை

 (லியோன்)

மட்டக்களப்பு  மாவட்ட குற்றச் செயல் ஆய்வு கூட வருடாந்த பரிசோதனை இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .மட்டக்களப்பு மாவட்ட குற்றச் செயல் நடந்த இடத்தினை பரிசோதிக்கும் ஆய்வு கூடத்திற்கான  வருடாந்த பரிசோதனை மாவட்ட குற்ற தடவியல் பொறுப்பதிகாரி கே .ரவிச்சந்திரன் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது .

இந்த ஆய்வுகூட பரிசோதனை நிகழ்வில் இலங்கை குற்ற பதிவேட்டுக்கான அத்தியட்சகர் பொலிஸ் அதிகாரி ஜகத் சேரன் கலந்துகொண்டு ஆய்வு கூட்டத்தினை பார்வையிட்டார் .

மாவட்ட குற்றச் செயல் ஆய்வுகூட பரிசோதனை நிகழ்வுக்கு வருகை தந்த இலங்கை குற்ற பதிவேட்டுக்கான அத்தியட்சகர் பொலிஸ் அதிகாரியை வரவேற்கும் நிகழ்வினை தொடர்ந்து அலுவலக  வளாகத்தில் மரக்கன்று நாட்டிவைக்கப்பட்டது .


இந்நிகழ்வில் மாவட்ட குற்ற தடவியல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்