பாடசாலை சீருடையில் நடமாடிய மாணவியை பொலிஸிசில் ஒப்படைப்பு –கல்லடியில் சம்பவம்

மட்டக்களப்பு கல்லடி உப்போடை பகுதியில் பாடசாலை சீருடையுடன் நடமாடிய மாணவி ஒருவரை காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் சம்மேளனத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

கல்முனை பெரியநீலாவணையில் உள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு பாடசாலை சீருடையுடன் நடமாடியதையடுத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறித்த மாணவியை கல்முனையை சேர்ந்த இளைஞர் ஒருவர் அழைத்துவந்து குறித்த பகுதியில் விட்டுச்சென்றுள்ளதாகவும் திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள குறித்த மாணவி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.