வடமாகாண முதலமைச்சரே நீங்கள் கூறிய வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள்.


 (பழுகாமம் நிருபர்)
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் அரசியலுக்குள் வரவேண்டும் என விரும்பியவர்களுள் நானும் ஒருவன். அவரிடம் நான் வினையமாக வேண்டுவது! தயவு கூர்ந்து இப்போதிருக்கின்ற சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு சம்மந்தன் அவர்கள் 84 வயதாகியும் கூட அவர் எல்லா விடையங்களையும் அறிந்து வைத்திருக்கின்றார், அவர் இருக்கும்போது ஒரு மாற்றுத் தலைமை தேவையில்லை என்று நீங்கள் குறிப்பிட்ட அந்த வாதர்த்தைகளுக்கு நீங்களே மதிப்பளித்து, அதனை காற்றிலே விட்டுவிட வேண்டாம். நீங்கள் எங்களுடன் சேர வேண்டும். அதுபோல் அண்ணன் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களே! நீங்கள் எங்களுடைய தலைவருடன் சேர்ந்து வேலை செய்தபோது இருந்த உறவு மீண்டும் மிளிர வேண்டும் எம்முடன் இணைந்து மக்களுக்கு பணியாற்ற வாருங்கள்.

என கிழக்கு மாகாண விவசாய  அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

 தியாக தீபம் திலீபனின் 30 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் போரதீவுப்பற்றுப் பிரதேசக் கிளையினால் மட்டக்களப்பு பழுகாமம் துரௌபதையம்மன் ஆலய முன்றில் செவ்வாய் கிழமை (26) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் இதில் மேலும் கருத்து தெரிவிக்கையில்…..



நமக்குச் சாதகமாக பல சந்தர்ப்பங்கள் வந்திருக்கின்றன. அவர்றையெல்லாம் தவற விட்டிருக்கிறோம். இருந்த போதிலும் நமக்கு மிகவும் அனுபவம் வாய்ந்த தலைமை ஒருவர் வாய்திருக்கின்றார் அவர் உலக அங்கீகாரம் பெற்ற தலைவராகக் காணப்படுகின்றார். அந்த தலைமை என்ன சொல்கின்றது என்பது பற்றி அதிகம் யோசிக்க வேண்டிய அவசியமல்ல. எனவே தமிழ் மக்களுக்கு தங்களுடைய கருத்தைச் சொல்லுகின்ற எல்லாத் தலைவர்களும், மக்களுடைய நிலைத்திருக்கின்ற ஒரே ஒரு மிக முக்கியமான விடையம் என்னவெனில் நம்முடைய பலவீனங்கள் தொடர்பாக எமக்கு ஏற்பட்ட எதிர்ப்புக்கள் தொடர்பாக பேசாமல் இருப்துகூட சிலேளைகளில் நல்லாதாக இருக்கும். நாங்கள் அடைய இருக்கின்ற இலக்கை அடைவதற்கு என்னன்ன உத்திகளைக் கையாள வேண்டும் என்பதில்தான் கருத்தாக இருக்க வேண்டும். இந்த விடையங்களில் எமது கட்சியின் உறுப்பினர்கள் எல்லாம் தற்போது நன்றாக தெழிவடைந்து வருகின்றார்கள்.



இலங்கையிலே ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை ஆக்குவதென்பது ஓர் இலகுவான காரியமல்ல மிக மிக கஸ்ற்றமான காரியம். அந்த வகையில்தான் எத்தனையோ முரண்பாடுகளுள்ள தலைவர்களுடன் எமது தலைவர்கள் பேசித்தான் தற்போது அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை வந்திருக்கின்றது.



இந்தவிடையத்தில் எமக்கு சந்தேகம் என்றால் எமது தலைவர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.  இவைகளனைத்தும் மிக மிக நுணுக்கமாக ஆராய்ந்து எடுக்கப்பட்ட விடையங்கள். ஒற்றையாட்சி என்கின்ற விடையத்தை மெல்ல நகர்த்திவிட்டு ஒருமித்த நாடு என்ற பத்ததை இடுவதற்கு எமது தலைவர்கள் எத்தனை விதமான உத்திகளைக் கையாண்டிருப்பார்கள் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும்.



எனவே அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை மிக மிக கவனமாக செய்து வைத்திருக்கின்றோம். இனி இதனை ஒரு அரசியலமைப்புச் சட்டமாக ஆக்குவதும், அதனை நாடாளுமன்ற வாக்கெடுப்பிலே மக்கள் தீர்ப்பு கொண்டுவரப்படுவதும் தொடர்பான விடையங்கள் பற்றி மிகவும் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். இவற்றைச் சாத்தித்துத்தர வேண்டியது யார் நாடாளுமன்றிலே மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டுமாக இருந்தால் ஆகக் குறைந்தது 150 வாக்குகள் வேண்டும் எங்களிடம் அள்ளது ஆக 16 வாக்குகள். மிகுதி 134 வாக்குகளையும் ஜனாதிபதி அவர்களும், பிரதமர் அவர்களும்தான் பெற்றுத்தர வேண்டும். இதற்காக வேண்டி எவ்வளவு பக்குவமாக, பவ்வியமாக நடந்து கொள்ள வேண்டும்.



வடக்கு கிழக்கு இணைப்பாக இருந்தலும்சரி அரசியல் தீர்வாக இருந்தாலும்சரி அது முஸ்லிம் ககோதரர்களையும் ஒன்று சேர்த்துதான் செயற்பட வேண்டும். இவ்வேளைகளில் எமது பகைமை தவிர்த்து எவ்வாறெல்லாம் எமது உத்திகளைக் கையாள முடியுமோ அவற்றையெல்லாம் கையாள வேண்டும். ஏமாற்றாமல் அவர்களுக்கு விளங்க வைத்து அவர்களிடமுள்ள தப்பபிப்பிராயங்களை எடுத்து நாம் செயற்பட வேண்டும். இவ்வாறு செயற்பட்டால் நாம் பெறக்கூடிய அதி உச்ச அதிகாரத்தைப் பெறுவோம். எங்களது ஐயா வெறும் இளிச்சவாயரல்ல என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எதை எதை இடித்து வைக்க வேண்டுமோ அங்கங்கெல்லாம் அவர் இடித்து வைப்பார்.



இப்போது சிங்கள தலைவர்களும், நினைக்கின்றார்கள் இங்கு சிறந்த ஓர் அரசியலமைப்பு தேவை என்று, நாங்களும் நினைக்கின்றோம். ஆனால் இதனைக் குளப்பி விடுவார்கள் என்று ஊரிலே உள்ள றவுடிகளுக்கு உலகத்திலே உள்ள உத்தமர்கள் பயப்படுவது போன்று நாம் பயப்படுகின்றோம்.



இவைகளனைத்தையும் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவும், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களும், செவ்வனே வழிநடாத்துவார்கள் என எதிர்பார்க்கின்றோம.;



இந்நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் அரசியலுக்குள் வரவேண்டும் என விரும்பியவர்களுள் நானும் ஒருவன். அவரிடம் நான் வினையமாக வேண்டுவது! தயவு கூர்ந்து இப்போதிருக்கின்ற சூழ் நிலையைக் கருத்தில் கொண்டு சம்மந்தன் அவர்கள் 84 வயதாகியும் கூட அவர் எல்லா விடையங்களையும் அறிந்து வைத்திருக்கின்றார், அவர் இருக்கும்போது ஒரு மாற்றுத் தலைமை தேவையில்லை என்று நீங்கள் குறிப்பிட்ட அந்த வாதர்த்தைகளுக்கு நீங்களே மதிப்பளித்து, அதனை காற்றிலே விட்டுவிட வேண்டாம். நீங்கள் எங்களுடன் சேர வேண்டும். அதுபோல் அண்ணன் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களே! நீங்கள் எங்களுடைய தலைவருடன் சேர்ந்து வேலை செய்தபோது இருந்த உறவு மீண்டும் மிளிர வேண்டும் எம்முடன் இணைந்து மக்களுக்கு பணியாற்ற வாருங்கள் என அவர் தெரிவித்தார்