யாழ் மற்றும் மட்டக்களப்பு மகளீர் யுத்தம் ஆரம்பம்.

(சசி துறையூர் )
யாழ் மற்றும் மட்டக்களப்பு மகளீர் யுத்தம் ஆரம்பம்.

தற்போது அனுராதபுரத்தில்
 நடைபெற்று வரும் 29 வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியில்  மட்டக்களப்பு யாழ்ப்பாண மகளீர் அணிகளுக்கிடையிலான கபடி சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்னும் சற்று நேரத்தில் (28.09.2017 வியாழக்கிழமை பி.ப 02.15 ) அனூராதபுரம் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவ் இறுதிப் போட்டி இரண்டு (வட கிழக்கு)  மாகாணங்களுக்கிடையிலான சவால் மிக்க போட்டியாக அமையவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அணியானது குருணாகல், காலி மற்றும் மன்னார் மாவட்ட அணிகளை தேற்கடித்து இந்த இறுதிச் சுற்றுப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதே வேளை யாழ் மகளீர் அணியும் பலமிக்க அணியென்பதும் குறிப்பிடத்தக்கது.