சைட்டத்திற்கு எதிரா மட்டக்களப்பில் இருந்து வாகன பேரணி

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்படும் வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டதுடன் மட்டக்களப்பில் இருந்து சைட்டத்திற்கு எதிரான வாகப் பேரணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.

சைட்டம் எதிர்ப்பு மக்கள் அரண் என்ற அமைப்பினால் முன்னெடுத்து வருகின்ற இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் அரச மருத்துவர்கள் சங்கம் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து இந்த எதிர்ப்பு பேரணியை ஆரம்பித்துள்ளது.

இலங்கையின் மொத்த வருமானத்தில் 6 வீதம் கல்விக்காக செலவு செய்ய வேண்டிய நிலையில் இன்று 1.8 வீதம் மாத்திரமே செலவிடப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில் சைட்டம் போன்ற தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதும் இலவச கல்வியை புறக்கணிப்பதும் எதிர்கால சந்ததிகளுக்கு தீங்கு விளைவிக்கும் செயலாகும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்த இந்த வாகன பேரணியானது அம்பாறையினை அடையவுள்ளது.

இது போல இலங்கையின் ஏனைய 4 மாவட்டங்களாக காலி திருகோணமலை, யாழ்ப்பாணம் கண்டி ஆகிய மாவட்டங்களில் புறப்பட்டு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பில் உள்ள சகல வீதிகளையும் மூடி எமது எதிர்ப்பை காட்ட திட்டமிட்டுள்ளோம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் டாக்டர் கௌரிசங்கர் தெரிவித்தார்.

எமது போராட்டமானது இலங்கையின் இலவசக் கல்வியையும் பொது சுகாதாரத்தையும் பாதுகாப்பதே நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.