இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் இசைக்கருவிகள் வழங்கி வைப்பு


( மண்டூர் நிருபர்) கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் விவேகானந்தபுரம் திருக்கொன்றை அறநெறி பாடசாலைக்கு இசைக்கருவிகள் ஞாயிற்றுக்கிழமை(10) வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு கிராம சேவை உத்தியோகஸ்தர் மா.சத்தியசோதி நாகதன்பிரான் ஆலய பிரதமகுரு கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு.குருகுலசிங்கம் கல் உடைக்கும் தொழிலாளர் சங்க தலைவர் திரு.பேரின்பமூர்த்தி இளம் சுடர் விளையாட்டு கழக தலைவர் வை.திலகநாதன் சபையின் செயலாளர் செல்வி.ம.கலாவதி அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்; பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.