வெட்டாப்பு பத்திரிகையின் 25 ஆண்டு நிறைவு நிகழ்வு

 (லியோன்)

கத்தோலிக்க பத்திரையான வெட்டாப்பு பத்திரிகையின் 25 ஆண்டு நிறைவு நிகழ்வு (23) சனிக்கிழமை  மட்டக்களப்பில் நடைபெற்றது
.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் கத்தோலிக்கர்களின் ஒரே கத்தோலிக்க  பத்திரிகையான  வெட்டாப்பு பத்திரிகையின் 25 ஆண்டு நிறைவு  நிகழ்வு பத்திரிகை  ஆசிரியர் அருட்தந்தை ஜேசுதாசன் தலைமையில் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது .

பத்திரிகையின் வெள்ளிவிழா நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் நடத்தப்பட்ட மறைக்கல்வி போட்டி பரீட்சையில் வெற்றி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்  .

இதேவேளை பத்திரிகைக்கு பெயர் வைத்த அருட்தந்தை ஜோசெப் மேரி அடிகளாருக்கும் , துறவர பணி வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அருட்தந்தை சுவாமிநாதன் அடிகளாருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர் 


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா மற்றும் நிகழ்வில் மறைகோட்ட அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , மாணவர்கள் ,பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர்