மைக்கல் கல்லூரியின் 06 வது மாபெரும் நடைபவனி

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில்  புகழ்பெற்ற புனித மைக்கல் கல்லூரியின் 06 வது மாபெரும் நடைபவனி நிகழ்வு (23) சனிக்கிழமை நடைபெற்றது.



கடந்த ஐந்து  வருடமாக இந்த நடைபவனியை புனித மைக்கல் கல்லூரியின் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை சமூகமும் இணைந்து நடாத்திவருகின்றது.


நடைபவனியின் ஆரம்ப நிகழ்வுகள்  கல்லூரி  அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் பாடசாலை முன்பாக ஆரம்பமானது.


இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக  அருட்தந்தையர்கள் ,,பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள். பழைய மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதேபோன்று பாடசாலையின் வளர்ச்சிக்கு கடந்த காலத்தில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய கல்லூரி  ஆசிரியர்களான நிரஞ்சலா தேவி ரவீந்திரநாத் , அரசகோன் சாள்ஸ் அரியரெட்ணம் மற்றும் துறவர பணி வாழ்வில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த அருட்தந்தை சுவாமிநாதன் அடிகளார் ஆகியோர்  இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை மற்றும் அருட்தந்தையர்கள் ,கல்லூரி புதிய பழைய மாணவர்கள் ,ஆசிரியர்கள்  பங்குபற்றுதலுடன் 2017 ஆம் ஆண்டுக்கான புனித மைக்கேல் நடைபவனி  ஆரம்பமானது.


இந்த நடை பவனியின்போது கல்லூரி பழைய மாணவர்களினால் மரக்கன்று நாட்டும் நிகழ்வும் ,வீதியில் உள்ள குப்பைகளை  அகற்றும் பணிகள் முன்னேடுக்கப்பட்டமை  குறிப்பிடத்தக்கது.