மென்திறன் அபிவிருத்தி தொடர்பான மூன்று நாள் செயலமர்வு

(லியோன்)

இளைஞர் , யுவதிகளுக்கான மென்திறன் அபிவிருத்தி தொடர்பான மூன்று  நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது .


சர்வதேச தொழிலாளர்கள் நிறுவனம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்  ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் மென்திறன் அபிவிருத்தி தொடர்பான மூன்று  நாள் செயலமர்வு  தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய பயிற்சி திட்ட பணிப்பாளர் சுனில் கருணாரத்ன  தலைமையில் மட்டக்களப்பு சர்வோதயத்தில் நடைபெற்றது  .
இந்த மூன்று நாள் பயிற்சி செயலமர்வில் வடக்கு கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்தி மன்னார் ,வவுனியா , அம்பாறை ,மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த 180 இளைஞர் ,யுவதிகள் கலந்துகொண்டுள்ளதுடன் இவர்களுக்கான  பயிற்சிகளாக கட்டடிட நிர்மாணம் , நீர்க்குழாய் பொருத்துதல்  , மின் இணைப்பு ,தச்சு வேலை போன்ற தொழில்  பயிற்சி  வழங்கப்பட்டு இவர்களுக்கான தேசிய தொழில் தகமை சான்றிதழ்களும் . தொழில் உபகரணங்களும் , உடனடி தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்வதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன .

இதன் ஆரம்ப நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய பயிற்சி திட்ட பணிப்பாளர் சுனில் கருணாரத்ன ,சர்வதேச தொழிலாளர்கள் நிறுவனத்தின் தேசிய செயல்திட்ட இணைப்பாளர் ஆர் . சிவபிரகாசம் மற்றும் மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உத்தியோகத்தர்கள் , அதிகாரிகள் , இளைஞர் ,யுவதிகள் கலந்துகொண்டனர்