அருட்தந்தை ஜே ஐ சந்திரா அடிகளாரின் வெள்ளிவிழா நிகழ்வு

(லியோன்)

துறவர பணி வாழ்வில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த அருட்தந்தை ஜே  ஐ சந்திரா அடிகளாரின் விசேட திருப்பலி   இடம்பெற்றது .


மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் 25 ஆண்டுகள் துறவர வாழ்வில் ஆன்மீக பணிகளை ஆற்றி வெள்ளிவிழாவை கொண்டாடும் அருட்தந்தை ஜே  ஐ சந்திரா அடிகளாரின் விசேட திருப்பலியும் வெள்ளிவிழா நிகழ்வும் மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது

திருப்பலியை தொடர்ந்து  அருட்தந்தையின் 25 ஆண்டுகளை நிறைவு நிகழ்வாக பொன்னாடை போர்த்தி வெள்ளிவிழா கேக் வெட்டப்பட்டு அடிகளாருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன


இந்த வெள்ளிவிழா நிகழ்வில் அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள் , அருட்தந்தை ஜே  ஐ சந்திரா அடிகளாரின் குடும்ப உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்கள் மற்றும் பங்கு மக்கள் ,பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர் ‘