நல்லிணக்கத்துக்கான மாதிரி நிறுவ மட்டக்களப்பில் அங்குரார்பணம்

(லியோன்)

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகமும்  கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட நல்லிணக்கத்துக்கான மாதிரி நிறுவ அங்குரார்பண நிகழ்வு  மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில்  நடைபெற்றது


கல்லடி சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில்  நடைபெற்ற  இந்நிகழ்வில் விருந்தினர்களாக தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, கௌரவ விருந்தினராக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா ,மாவட்ட அரசாங்க  அதிபர் பி எஸ் எம் .சாள்ஸ்  கலந்துகொண்டனர்

நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக  பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள நல்லிணக்கத்துக்கான மாதிரி நிறுவகத்தின் பெயர் பலகையை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவர் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க திரைநீக்கம் செய்து வைத்தார் .

சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளருமான கலாநிதி சி. ஜெயசங்கர்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள்  மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றன
இந்நிகழ்வில் சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர்கள் ,மாணவர்கள் கலந்துகொண்டனர்