பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட வித்தியா ஹோம பூஜை நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட வித்தியா ஹோம பூஜை  நிகழ்வு  (07)  நடைபெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலை மாணவர்களில் 2017 ஆண்டு  தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ த.உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட வித்தியா ஹோம பூஜை  நிகழ்வு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய பிரதம சிவஸ்ரீ குருக்கள் தலைமையில் நடைபெற்றது .

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், எழுதவிருகின்ற பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் என்ற நோக்காகவும் கொண்டு மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட  இந்த விசேட  வித்தியா ஹோம பூசையினை பிரம்மஸ்ரீ ரஞ்சித சனாதன சர்மா குருக்களினால் நடத்தப்பட்டது .

இந்த வித்தியா ஹோம யாக பூஜை நிகழ்வில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணிய பணிப்பாளர் பொன் செல்வநாயகம் , மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கே .குணநாயகம் மற்றும்  மட்டக்களப்பு கல்விவலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில்  பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள்  ,மாணவர்களின் பெற்றோர்கள்,  ஆலய நிவாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்  .


ஹோம யாக பூஜை நிகழ்வினை தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது