இந்த வருடம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசி வழங்கும் நிகழ்வு

அனோரியா அக்கடமியில் கல்வி பயின்று தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்கும் க.பொ.த.சா.த தோற்றும் மாணவர்களுக்கு மத தலைவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்கள் ஆசி வழங்கி மத தலைவர்களினால் ஜெபிக்கப்பட்ட கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று 07.08.2017) திங்கட்கிழமை மாலை 03.30 மணியளவில் கல்லடி கப்பிரல் கம்பஸ்சில் அனோரியா அக்கடமின் நிர்வாகி கு.குமரேசன் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்வின் போது கப்பிரல் கம்பஸ்சில் ஆங்கிலம் கற்றும் மாணவியரின் வரவேற்பு நடனமும் அனோரியா அக்கடமியால் நடாத்தப்பட கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிகிண்ணங்களும் வழங்கப்பட்டதுடன். மத தலைவரகளின் ஆசியுரையும் ஆசியரியர்களின் வாழ்த்துரைகளும் இடம் பெற்றமை குறிப்பிடதக்கவிடயம்.