கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்

(லியோன்)

கல்வி அமைச்சின் செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடளாவிய ரீதியில் முன்பள்ளிகளில்   விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
.

இதன் கீழ்  கிழக்குமாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகத்தின் அனுசரணையின் கீழ் கிழக்கு மாகாணத்தில் உள்ள 1856 பாலர் பாடசாலைகளில்  இந்த டெங்கு ஒழிப்பு விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . .

இதற்கு அமைய இன்று மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட  இருதயபுரம் புனித வின்சட் டி போல் பாலர் பாடசாலையில் டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டன  

இந்த டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஆரம்ப  நிகழ்வில்  மட்டக்களப்பு கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் புவிராஜ் , பாலர் பாடசாலை கல்விப் பணியக முகாமைத்துவ உதவியாளர் திருமதி . கவின்யா, இருதயபுரம்  பங்கு தந்தை ,லெஸ்லி ஜெயகாந்தன்  , க]கிராம சேவை உத்தியோகத்தர் ,முன்பள்ளி  ஆசிரியர்கள்,   ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர்