ஏறாவூர் பற்று பிரதேச சபையுடன் சர்வோதயம் இணைந்து விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

 (லியோன்)

நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .


இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இந்த செயல் திட்டங்கள்    நடவடிக்கையாக  மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் .

இதற்கு அமைய  ஏறாவூர் பற்று பிரதேச சபையுடன் சர்வோதய நிழல் பிரதேச சபையும் , சர்வோதய தேசஉதய சபையும் இணைந்து மாவட்ட சர்வோதய இணைப்பாளர்   யு எல் எ . கரீம் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையினை இன்று முன்னெடுத்தனர் .

இந்த நடவடிக்கையின் கீழ் ஏறாவூர் பிரதேச சபைகுற்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு சந்தியில் இருந்து தன்னாமுனை வரையிலான வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதியினை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன .


இந்த சிரமதான பணியில் ஏறாவூர் பிரதேச சபைகுற்பட்ட கிராம மக்கள் மற்றும் சர்வோதய நிழல் பிரதேச சபை, சர்வோதய தேசஉதய சபை அங்கத்தவர்கள் கலந்துகொண்டனர்