வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம்

(லியோன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள அதிக வெப்பத்துடனான காலநிலையினால் மாவட்டத்தில் பாரிய வரட்சி நிலை  ஏற்பட்டுள்ள .


இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் குட்டிநீர்க்கான தட்டுபாடு நிலவி வருகின்றது .

இந்த நிலையில் வெல்லாவெளி , வவுணதீவு ,செங்கலடி ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம பகுதிகளில்  நிலவுகின்ற குடிநீர் பிரச்சினையினை நிவர்த்தி செய்யும் முகமாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் தண்ணீர் பௌசர்கள் வழங்கப்பட்டு வருகின்றன

இதன்கீழ் ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் உழவு இயந்திரம் மற்றும் தண்ணீர் பௌசர் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு  மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது .


இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவாட்ட செயலகத்தில் அராசாங்க அதிபர் திருமதி .பி எஸ்  எம் .சாள்ஸ் தலைமையில்  இந்த உழவு இயந்திரம் மற்றும் தண்ணீர் பௌசர்கள்  வெல்லாவெளி , வவுணதீவு ,செங்கலடி ஆகிய பிரதேச செயலகம் மற்றும் பிரதேச சபை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது .