சமுர்த்தி வலய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்படும் கலாசார இலக்கிய சித்திரப் போட்டி

(லியோன் )


மண்முனை வடக்கு வாழ்வின் எழுச்சி  2017 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி வலய மட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையில்  நடாத்தப்படும் கலாசார இலக்கிய சித்திரப் போட்டி  பரீட்சைகள் இன்று கல்லடியில்  நடைபெற்றது .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட கல்லடி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி வலய மட்ட பாடசாலை மானவார்களுக்கிடையில் மண்முனை வடக்கு சமுர்த்தி வாழ்வின் எழுச்சி திணைக்கள  ஏற்பாட்டில்  கலாசார இலக்கிய சித்திரப்  போட்டி பரீட்சைகள்   கல்லடி வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை  வங்கி முகாமையாளர்  கே .தங்கத்துரை   தலைமையில்  மட்டக்களப்பு  கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய மண்டபத்தில்  இன்று நடைபெற்றது .

நடைபெற்ற  போட்டி பரீட்சையில் தனிப்பாடல்கள்,  நாட்டார் பாடல்கள் ,கவிதை , கட்டுரை , பாடல் நயத்தல், குழு நடனம் , கூத்து போன்ற பல பாரம்பரிய கலாசார  போட்டிகள்  இடம்பெற்றன

வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை வங்கி வலய  மட்டத்தில்  பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்படுகின்ற கலாசார இலக்கிய போட்டி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள்  பிரதேச செயலக  மட்டத்திலும் அதனை தொடர்ந்து மாகான  மட்டத்திலும் நடைபெறவுள்ள சமுர்த்தி வாழ்வின் எழுச்சி திணைக்கள கலாசார இலக்கிய போட்டிகளில் பங்கு பற்றவுள்ளனர் .

இன்று  மட்டக்களப்பு  கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற வாழ்வின் எழுச்சி சமுதாய அடிப்படை  வலய மட்ட கலாசார  இலக்கிய போட்டி நிகழ்வில்   நடுவர்களாக  கல்லடி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிருவாக விரிவுரையாளர்களான  ,கல்லடி வேலூர் சக்தி வித்தியாலய ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர்

நடைபெற்ற போட்டி நிகழ்வில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி பயனாளிகள் , பயனாளிகளின்  பாடசாலை செல்லும் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .