பாலமீன்மடு கடக்கரை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

   (லியோன்)


மட்டக்களப்பு  பாலமீன்மடு  கடக்கரை பகுதியில் இருந்து  ஆண் ஒருவரின்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் ,


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் - பாலமீன்மடு  கடக்கரை பகுதியில் இருந்து   வாவிக்கரை  வீதி ,சின்னுப்போடை பகுதியை சேர்ந்த ( சுப்பிரமணியம் குமார் , வயது 41  ) என்பவர் சடலம் பொலிசாரினால்  மீட்கப்பட்டுள்ளதாக  மட்டக்களப்பு  பொலிசார் தெரிவிக்கின்றனர் . 

குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்ட இடத்தில் இருந்து சில தடய பொருட்கள்  பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவிக்கின்றனர் .


சடலமாக  மீட்கப்பட்ட குறித்த நபரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்