கிழக்குமாகாண புதிய சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு

(லியோன்)கிழக்குமாகாண புதிய சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் தமது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது
   . 


கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபராக எச் .டி .கே .எஸ் ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை கிழக்கு மாகாண காரியாலயத்தில் நடைபெற்றது


இதன் ஆரம்ப நிகழ்வாக புதிய பொலிஸ்மா அதிபரை வரவேற்கும் முகமாக பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர்களினால் மரியாதை செலுத்தப்பட்டது .

இதனை தொடர்ந்து சமைய வழிபாடுகளுடன் தமது கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது .

கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் கிழக்குமாகானத்திற்காக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் சமைய தலைவர்கள் ,  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ,மாவட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்