கல்முனை பகுதியில் இயங்கும் கேபிள் ரிவி நிறுவனம் தொடர்பில் விசாரணை

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் கேபிள் ரிவி நிறுவனம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கல்முனை பிரதேச அபிவிருத்திக்குழு பணிப்புரை வழங்கியுள்ளது.
அண்மையில் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்ற அபிவிருத்திக்குழுவின் கூட்டத்தின்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனைப்பகுதியில் இரண்டு வகையான கேபிள் ரீவி நடாத்தப்படுகின்றது.அரசாங்கத்திற்கு வரிசெலுத்தி ஆஸ்க் கேபிள் நிறுவனத்தினால் இலங்கையின் வடகிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் கேபிள் ரீவி நடாத்தப்படுவதுடன் மட்டக்களப்பினை தளமாக கொண்டு கல்முனையிலும் நடாத்தப்படுகின்றது.

ஆனால் அலெக்ஸ்குமார் என்பரினால் பெரியநீலாவனையினை தளமாக கொண்டு எந்தவித அனுமதியும் இல்லாமல் நடாத்தப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.இதுதொடர்பில் சில விடயங்கங்கள் குறித்த கேபிள் ரீவி தொடர்பில் அறியப்பட்டுள்ளன.

1) 2010 முதல் கல்லாறு என்னுமிடத்திலிருந்து கேபிள் ரிவி நடாத்துகின்றார்.
2) 2010ல் ஆரம்பித்தபோது லங்கா கேபிள் அன் சட்டலைற் என்ற நிறுவனத்தின் பெயரில் இயங்கினார். அலுவகத்திலும் அவரது வாகனத்திலும் இந்த பெயர்களே குறிப்பிடப்பட்டிருந்தது.
3) பின்னர் திடீரென்று அந்த பெயர்கள் அழிக்கப்பட்டு எல்பிஎன் பெயர்கள் மாற்றப்பட்டன.
4) அவ்வாறு அவ்வப்போது பெயர்கள் மாற்றப்பட்டபோதிலும் வாடிக்கையாளர்கள் எவருக்கும் எந்த வித ரசீதும் வழங்கப்படுவதில்லை.
5) 2013 முதல் பெரியநிலாவணைக்கு அலுவலகம் மாற்றப்பட்டது.
6) இப்போது அவர் தனது அலுவலகத்தில் உள்ள எல்பிஎன் பெயர் பலகையை நீக்கிவிட்டு எந்த விபரமும் இல்லாமல் நடாத்தி வருகிறார்.
7) இதிலிருந்து அவர் அவ்வப்போது லைசன்ஸ் உள்ள நிறுவனங்களின் லைசென்ஸ் பிரதிகளைப்பெற்று சட்டவிரோதமாகவே நடாத்திவருகின்றார் என்பது தெளிவாகின்றது.
8) ஒரு கேபிள் ரிவி லைசன்ஸ் உள்ளவர் தனது லைசன்ஸ்சை மற்றுமொருவருக்கு கொடுப்பது சட்டவிரோதமானது என்பது தெளிவாக் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் எல்பிஎன் என்ற நிறுவனம் தனது லைசென்ஸ்சை இவர் கேபிள் ரிவி நடாத்துவதற்கு வாடகைகக்கு கொடுத்திருக்கின்றனர். அதுகூட சட்டவிரோதமானதுதான்.  
9) பெரிய நிலாவணையிலிருந்து பெரிய கல்லாறு வரையில் கிழக்காகவும், பெரிய நிலாவணையிலிருந்து காரைதீவு வரை மேற்காகவும் பைவர் கேபிள்கள் இழுக்கப்பட்டிருக்கின்றன. இந்த கேபிள்கள் எப்படி இலங்கைக்கு இறக்குமதிசெய்யப்பட்டன என்பது தெரியவில்லை.
10) இவரரிடம் பணியாற்றிய குமார் என்பவர் தெரிவித்த தகவலின்படி அவரிடம் 4000 வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். மாதம் ஒன்றுக்கு ஒரு வாடிக்கையளரிடம் அவர் 500 ரூபா அறிவிடுகின்றார்.
12) அப்படியெனில் அவருக்கு மாதம் தோறும் 20 லட்சம் ரூபா வருமானமாக வருகின்றது. அப்படியெனில் மாதம் தோறும் 8 லட்சம் ரூபாக்களை அவர் ரிஆர்சிக்கு ரெலிகொம் லெவி செலுத்த வேண்டியிருக்கும்.
13) இந்தளவு தொகையை அரசாங்கம் மாதம் தோறும் இழந்து வருகின்றது.
எனவே இந்த கேபிள் நிறுவனம் தொடர்பில் பூரண விசாரணை நடாத்துவதன் மூலம் சட்ட விரோதமான நடவடிக்கைகளை தடுக்கமுடியும் என்பதுடன் அரசாங்கத்திற்கு ஏற்படும் நஸ்டத்தினையும் பூர்த்திசெய்யமுடியும்.

குறித்த கேபிள் ரீவியை நடாத்துபவர் சிலருக்கு பணங்களை வழங்கி இதுவரை காலமும் செயற்பட்டுவந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே குறித்த கேபிள் ரீவி தொடர்பில் முழுமையான விசாரணை நடாத்தி அதற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என கல்முனை பகுதி மக்கள் பிரதேச அபிவிருத்திக்குழுவிடமும் கல்முனைப்பொலிஸாரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.