சிறுவயதில் பிள்ளைகளின் ஆற்றலை மட்டிட முடியாது. இரா.சாணக்கியன்


(பழுகாமம் நிருபர்)
சிறுவயதில் பிள்ளைகளின் ஆற்றலை மட்டிட முடியாது என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஐந்தாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை இறுதி நாள் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே தெரிவித்தார். அவல் மேலும் உரையாற்றுகையில்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு பெரும் சுமையாக இருக்கும். ஏனென்றால் இந்த சின்ன வயதில் ஒரு பிள்ளை முழுத்திறமையையும் வெளிக்காட்ட முடியாது. வெட்டுப்புள்ளிக்கு குறைவாக எடுக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் பெரிய சாதனைகள் புரிந்ததும்,  பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள்  உயர்தரத்தில் வீழ்ச்சி அடைந்தமையும் பதிவாகி உள்ளமையும் கண்கூடு.
புலமைப்பரிசில் பரீட்சையில் பெற்றோர்கள் எடுக்கும் அதீத அக்கறை தொடருமாக இருந்தால் அனைத்து பிள்ளைகளும் சாதனையாளர்களாக மாறுவார்கள். ஆனால் நமது பெற்றோர்கள் தரம் ஐந்து வரையும் பிள்ளைகளோடு இணைந்து ஓடி விட்டு பின்னர் களைத்து விடுகின்றனர். அவ்வாறில்லாமல் தொடர்ந்து அக்கறையாக செயற்பட வேண்டும்.