திருத்தொண்டர் திருநிலைப்படுத்தும் விசேட திருப்பலி திருச்சடங்கு

 (லியோன்)

திருத்தொண்டர்  திருநிலைப்படுத்தும் விசேட  திருப்பலி திருச்சடங்கு  இன்று மட்டக்களப்பு  தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை  ஆலயத்தில் நடைபெற்றது.  


மட்டக்களப்பு  மறை கோட்டத்தின்  புளியந்தீவு மரியாள் பேராலய பங்கை  சேர்ந்த அருட்சகோதரர் ஜொன்சன் லொயிட் திருத்தொண்டராக திருநிலைப்படுத்தும்  விசேட திருப்பலி திருச்சடங்கு  மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் மட்டக்களப்பு  தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் இன்று நடைபெற்றது 

இந்த விசேட திருப்பலியில் மட்டக்களப்பு மறை மாவட்ட அருட்தந்தையர்கள் , அருட்சகோதரிகள் ,   திருத்தொண்டராக திருநிலைப்படுத்தப்பட்ட  அருட்சகோதரரின்  பெற்றோர்கள் , குடும்ப உறுப்பினர்கள் , பங்கு மக்கள் என பலர் கலந்துகொண்டு இந்த விசேட திருப்பலியை சிறப்பித்தனர் .