காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 27வது ஆண்டு ஞாபகார்த்த தின நிகழ்வு

 (லியோன்)

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 27வது ஆண்டு ஞாபகார்த்த தின நிகழ்வு அமைதி போராட்டமும் இன்று மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்றது .

மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் 1990 ஆண்டு ஆவணி மாதக் காலப்பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தின் சுற்றிவளைப்புக்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும்  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஞாபகார்த்த  ஏற்பாட்டு குழு  ஏற்பாட்டில் 27வது ஆண்டு ஞாபகார்த்த  தின  வேந்தல் நிகழ்வும் , அமைதியான கண்டன போராட்டமும் மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்றது .

1990 ஆண்டு ஆவணி மாதக் காலப்பகுதிகளில் வாழைச்சேனை , பேத்தாளை , மீராவோடை ,கிண்ணையடி , கிரான் , சந்திவெளி ,முறக்கொட்டான்சேனை ,சித்தாண்டி  ஆகிய கிராமத்தை சேர்ந்த காணமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும்  மட்டக்களப்பு சித்தாண்டி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற 27வது ஆண்டு ஞாபகார்த்த  நிகழ்வில்  கிழக்குமாகான விவசாய ,கால்நடை , மீன்பிடி ,கூட்டுறவு அமைச்சர் கே .துரைராஜசிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார் .

நடைபெற்ற இந்த ஞாபகார்த்த நினைவேந்தல் நிகழ்வின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைதியான முறையில் தமது கண்டன போராட்டத்தை மேற்கொண்டதுடன் தொடர்ந்து ஆலய முன்றலில்  சுடர் ஏற்றப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டது .

இதனை தொடர்ந்து பிரதான நிகழ்வுகள் ஆலய முன்றலில் நடைபெற்றதுடன் இது தொடர்பான மகஜர் கையளிக்கப்பட்டது .

.இந்நிகழ்வில் கிழக்குமாகான விவசாய ,கால்நடை , மீன்பிடி ,கூட்டுறவு அமைச்சர் கே .துரைராஜசிங்கம், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் குடும்ப உறுப்பினர்கள் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் ஞாபகார்த்த  ஏற்பாட்டு குழு உறுப்பினர்கள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்