வேகக்கட்டுப்பாட்டை இழந்த முற்சக்கர வண்டி வாவிக்குள் விழுந்து விபத்து

(லியோன்)

மட்டக்களப்பு நகர் புதுப்பாலம்  பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முற்சக்கர வண்டி வாவிக்குள் விழுந்து விபத்து
.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட  மட்டக்களப்பு நகர் புதுப்பாலம்  பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகிய முற்சக்கர வண்டி வாவிக்குள் விழுந்து விபத்திற்குள்ளானதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நகரை நோக்கி பயணித்த  முற்சக்கர வண்டியே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர் .

முற்சக்கர வண்டி விபத்திற்குள்ளானதில் இதில் பயணித்த எவருக்கும் எதுவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவித்தனர் .


குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்