கீரிமடு ஸ்ரீ சித்தவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த சதுர்த்தி கர மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

(லியோன்)

மட்டக்களப்பு பார்வீதி கீரிமடு ஸ்ரீ சித்தவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த சதுர்த்தி கர  மகோற்சவம் (16) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமானதுடன் வசந்த மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


வசந்த மண்டப பூஜையினைத்தொடர்ந்து கொடித்தம்பம் அருகில் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்று உள்வீதியுலா நடைபெற்றது.


வீதியுலாவினை தொடர்ந்து கொடித்தம்பத்தில் கொடிச்சீலைக்கு பூஜைகள் நடைபெற்றதுடன் வேத,நாத,மேள முழங்க  அடியார்களின் ஆரோகரா கோசத்துடன் சதுர்த்தி கர  மகோற்சவம் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.


கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பததிற்கு அபிசேக பூஜையுடன் சிறப்பு தம்ப பூஜையும் நடைபெற்றது.


அதனைத்தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் நடைபெற்ற பூஜையுடன் கொடியேற்ற பூஜை சிறப்பாக நிறைவுபெற்றது.


இந்த  பெருவிழாவில் பெருமளவான அடியார்கள்  கலந்து சிறப்பித்தனர்