மாமாங்கம் கடற்புறா மீன் வியாபாரிகளுக்கு சீருடைகளும் , சங்கத்திற்கான கதிரைகளும் வழங்கும் நிகழ்வு

(லியோன்)

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் பன்முகபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை  ஊக்குவிக்கும் வாழ்வாதார உதவி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .


இதற்கு அமைய கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரின் பன்முகபடுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாமாங்கம் கடற்புறா மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் முகமாக மீன் வியாபாரிகளுக்கு  சீருடைகளும் , சங்கத்திற்கான கதிரைகளும் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாமாங்கம் கடற்புறா மீன் வியாபாரிகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாமாங்கம் கைத்தொழில் அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது  


இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம் எஸ் எஸ் அமீர் அலி , கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் இணைப்பாளர் ஜோன் , மாமாங்கம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கே .தவராசா மற்றும் மாமாங்கம் கடற்புறா மீன் வியாபாரிகளின் சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .