மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி வாவிகரையினை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள்


(லியோன்)

தேசிய டெங்கு ஒழிப்பு மற்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  - சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு  ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின்  பணிப்புரைக்கு அமைவாக பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவின்  வழிகாட்டலின் கீழ் பொலிஸ் திணைக்களங்கள் ஊடாக  நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு  சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில்  மட்டக்களப்புஅம்பாறை  பிரதி  பொலிஸ்மா  அதிபர்   டப்ளியு . ஜெ . ஜாகொட  ஆராச்சி  மற்றும் மட்டக்களப்பு  மாவட்ட  உதவி பொலிஸ்  அத்தியட்சகர்   கே .பி . கீர்த்திரத்ன  ஆலோசனைக்கு அமைவாக மாவட்டத்தில்  டெங்கு ஒழிப்பு   நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு  பொலிஸ்  நிலைய சமூக தொடர்பாடல்  அதிகாரிகளின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  பொலிஸ்  நிலைய   பொறுப்பதிகாரி   தீஹா வதுற   தலைமையில்  மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதி வாவிகரையினை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டன .


 இதன் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி எஸ் எம் .சாள்ஸ் ,மட்டக்களப்பு  மாவட்ட  உதவி பொலிஸ்  அத்தியட்சகர்   கே .பி . கீர்த்திரத்ன, மட்டக்களப்பு  பொலிஸ்  நிலைய   பொறுப்பதிகாரி   தீஹா வதுற மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் , சமூக தொடர்பாடல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் இந்த   டெங்கு ஒழிப்பு  விசேட  சிரமதான பணியில் ஈடுபட்டுள்ளனர்