கோரளைப்பற்று தெற்கு கிரான் விக்டர் அனைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(லியோன்)

மட்டக்களப்பு  கோரளைப்பற்று தெற்கு கிரான் பகுதியில் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள விக்டர்  அனைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு   (18) பிற்பகல்  நடைபெற்றது .


மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேரிலாவெளி முள்ளி பொத்தான கண்டம் பகுதியில் மத்திய அரசின்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள  விக்டர் அனைக்கட்டுக்கான  அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட கமநல திணைக்கள மாவட்ட பணிப்பாளர் என் .சிவலிங்கம் தலைமையில்  நடைபெற்றது .

மத்திய அரசின் 3.5 மில்லியன் ரூபா  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவு பேரிலாவெளி முள்ளி பொத்தான கண்டம் பகுதியில் புனர்மானம்  செய்யப்படவுள்ள விக்டர் அனைக்கட்டுக்கான அடிக்கல்லினை கிழக்குமாகான விவசாய ,கால்நடை , மீன்பிடி ,கூட்டுறவு அமைச்சர் கே .துரைராஜசிங்கம் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நாட்டி வைத்தார்  .

அனைக்கட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மாவட்ட கமநல திணைக்கள அதிகாரிகள் , கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பேரிலாவெளி முள்ளி பொத்தான கண்டம் கிராம விவசாயிகள் கலந்துகொண்டனர்