மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் ஐந்தாம் நாள் திருவிழா.
மண்டூர் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தில் இன்று(21) ஐந்தாம் நாள் திருவிழா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் விநாயகப்பெருமான் மூஷிக வாகனத்திலும் மலர்மாலைகள் சூடி வண்ண விளக்குகள் அலங்கரிக்க சுவாமி உலா வருகையில் வண்ணார்  சுவாமி முன்னால் சீலை ஏந்தியவாறு பின்னடையாய் நடந்து வருதலும் வேடுவ சாதியில் ஒருவர் வில்லம்பு கொண்டு இரு பக்கமும் பாதுகாவலாக முன் செல்வதும் ,பெண்கள் தீச்சட்டி ஆரத்தி தூக்கி வரவேற்க, ஆலவட்டம் சுமந்த  சிறுவர்கள் முன்னோக்கிச் செல்லவதும்  ஒரு பாரம்பரிய நிகழ்வாகும்.

இவ்வாறாக வெளி வீதி வலம் வருகின்ற காட்சி கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது.இவ் திருவிழா நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் அருள் வேண்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add caption


Add caption


Add caption