மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் நகர் பகுதிகளில் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

(லியோன்)

ஜனாதிபதியின்  பணிப்புரைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில்  டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


புனர்வாழ்வு , மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தனசிங்க  வழிகாட்டலின்  மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிராந்திய சுகாதார அலுவலகத்தின் ஆலோசனையுடன் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் மட்டக்களப்பு நகர் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .

இதற்கு அமைய மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளினால் கடந்த ஒருவாரமாக மட்டக்களப்பு நகர் பகுதிகளில் தெரிவு செய்யப்பட பிரதான இடங்களை துப்பரவு செய்யும் பணிகள் பிரதம  ஜெயிலர்  என் .பிரபாகரன் ஒழுங்கமைப்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே .எம் . யு , எச் . அக்பர்  தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

இதன் ஒரு நிகழ்வாக (08) சனிக்கிழமை  மட்டக்களப்பு மாநகர எல்லைக்குற்பட்ட சீலாமுனை பகுதியில் பிரதான வடிகான்கள் துப்பரவு செய்யும் பணிகள்  முன்னெடுக்கப்பட்டன .

இந்த துப்பரவு செய்யும் பணியில்  மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் . சிறைச்சாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் , பொதுசுகாதார பரிசோதகர்கள் . மாநகர சபை ஊழியர்கள் .சிறைக்கைதிகள் என பலர்  இணைந்து  இந்த துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.