தேசிய சாரணர் சங்கத்தின் 100 தேசிய மகாநாடு மட்டக்களப்பில் நடைபெற்றது

(லியோன்)

தேசிய சாரணர் சங்கத்தின் தேசிய மகாநாடு (08 ,09) சனி மற்றும் ஞாயிறு  இரு தினங்கள்  மட்டக்களப்பில் நடைபெற்றது .


சாரணர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 100 வது வருடத்தை சிறப்பிக்கும் வகையில் தேசிய மகாநாடு  மட்டக்களப்பு சாரணர் சங்கத்தின் தலைவரும் வலயக்கல்விப் பணிப்பாளருமான கே .பாஸ்கரன் தலைமையில்  மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது .   

ஆரம்ப நிகழ்வாக அதிதிகளை சாரணர்களினால் மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர் . இதனை தொடர்ந்து அதிதிகளினால் தேசிய , சாரண மாகான மாவட்ட கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .

இந்த தேசிய சாரணர் மகாநாட்டின் பிரதான நிகழ்வான சாரனர்களுக்கு தருசின்னம்  அணிவிக்கும்  நிகழ்வும் விசேட நிகழ்வாக தேசிய சாரணர் இணையத்தளம் அங்குரார்ப்பன நிகழ்வும் நடைபெற்றது .

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சாரணர் சங்கத்தின் பிரதம விருந்தினர்களினால் 100 சாரனர்களுக்கு தருசின்னம்  சின்னங்கள்  அணிவிக்கப்பட்டதுடன் .

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை சாரணர் சங்க பிரதம ஆணையாளர் பேராசிரியர் நிமால் டி  சில்வா , விசேட அதிதியாக இலங்கை சாரணர் சங்க தேசிய பயிற்சி ஆணையாளர் எம் .சரத் கொடகந்த ஆராச்சி  மற்றும் இந்த நிகழ்வில் அதிதிகளாக வடக்கு கிழக்கு விசேட ஆணையாளர் எம் .எப் .எஸ் .முஹீட், மற்றும்  இலங்கை  சாரண சங்க ஆசிரியர்கள் , சாரண மாணவர்கள் , மட்டக்களப்பு மாவட்ட சாரணர்கள் ,சிவில்உ அமைப்புக்களின்ட்ப பிரதிநிதிகள்ட என  பலர் கலந்துகொண்டனர்.