மண்டூர் கூமாவடி வீதி மதகு மீள்நிர்மாணம்!


( மண்டூர் நிருபர்)போரதீவுப் பிரதேசசபைக்குட்பட்ட மண்டூர் கூமாவடி-துறையடி வீதியில் உள்ள மதகு அண்மையில் சேதடைந்தமை சம்பந்தமாக எமது இணையத்தள செய்திச் சேவையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.தற்பொழுது இவ் வீதியில் உள்ள மதகானது மேற்படி பிரதேச சபையினால் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே மண்டூர் வடக்கு கி.மு.சங்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போரதீவுப் பற்று பிரதேசசபை செயலாளர் அ.ஆதித்தன் அவர்களின் தீவிர முயற்சியின் காரணமாக இம் மதகு மீள்நிர்மாணம் செய்யப்பட்டதையிட்டு நலன் விரும்பிகள் மற்றும் பிரதேசமக்கள் போரதீவுப்பற்று பிரதேசசபைக்கு தமது நன்றியினைத் தெருவித்துள்ளனர்.