மண்டூர் வெல்லாவெளி வீதியில் விபத்து! - ஒருவர் பலி


(மண்டூர் நிருபர்) மண்டூர் வெல்லாவெளி வீதியில் நேற்றிரவு(05) புளியடிபாலம் அருகே   கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

அறுவடை இயந்திரம் ஏற்றிவந்த உழவுஇயந்திரத்திலே மோட்டார் வண்டியில் வந்த நபர் மோதுண்டு சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

மரணமடைந்தவர் மண்டூரை பிறப்பிடமாகவும் வெல்லாவெளியை வசிப் பிடமாகவும் கொண்ட  இராமக்குட்டி தங்கதுரை வயது(38) என்பவர்  என இனம்காணப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையை வெல்லாவெளிப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


Add caption