பல்லாயிரக்கணக்கானோர் புடைசூழ நடைபெற்ற மாமாங்கேஸ்வரர் தேர்த்திருவிழா

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் உற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகு விமர்சையாக நடைபெற்றது.

வசந்த மண்டபத்தில் பஞ்சமுக விநாயகருக்கு இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து சுவாமி வீதியுலா வந்ததுடன் ஆண்கள் ஒரு புறமும் பெண்கள் ஒரு புறமும் வடமிழுக்கு தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

நாளை ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00மணிக்கு ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.