சுகாதார அமைச்சின் ஆளணி தீர்க்கப்படவேண்டுமானால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒழிக்கப்படவேண்டும் -கிழக்கு முதலமைச்சர்

இந்த நாட்டில் யாருடைய பிரச்சினைகள் தீர்ப்பட்டாலும் சுகாதார அமைச்சின் ஆளணி பிரச்சினை தீர்க்கபட வேண்டுமாக இருந்தால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஒழிக்கப்படல் வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தெரிவித்தார்.

 காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் நிர்மானிக்கப்பட்டுள்ள வைத்திய நிபுனர்கள் தங்குமிட விடுதி மற்றும் புனரமைக்கப்பட்ட பல் வைத்திய சிகிச்சை நிலையம் மற்றும் வெளிநோயாளர் பிரிவு என்பன வியாழக்கிழமை (13.7.2017) திறந்து வைத்த வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர் வைத்திய நிபுனர்களுக்காக அவர்களின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்களுக்கு பணத்தை கட்டி விடடு வரிசையில் நின்று அவர்களை சந்தித்தால் அவர்களிடம் இரண்டு நிமிடம் கதைக்க முடியாத வைத்திய நிபுனர்களாக இவர்கள் இருக்கும் போது ஏன் இங்கு சைட்டம் வரக்கூடாது என கேள்வி எழும்புகின்றது.

இந்தியாவுக்கு சென்றால் வைத்தியர்கள் சேவையை செய்வதற்காக காத்து கொண்டிருக்கின்றனர். விமான நிலையத்தில் போய் இறங்கியவுடன் அங்கு வாகனம் அனுப்பவா என வைத்திய நிபுனர்கள் நோயாளியிடம் கேட்கும் அளவுக்கு அங்கு நிலைமை இருக்கின்றது.

எல்லா வைத்தியர்களையும் சொல்லமுடியாது சிலர் இந்த நாட்டில் இந்த வைத்திய சேவையை வியாபாரா சேவையாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார்கள்.

பணத்தினை கொண்டு போய் வெளிநாடுகளில் வைத்திய துறையில் படித்து விட்டு அங்கிருந்து வந்து இலங்கையில் ஒரு பரீட்சைக்கு தோற்றி அவர்கள் எல்லாம் உள்வாங்கப்படுகின்றனர்.

இந்த நிலைமைகள் மாறாதவரைக்கும் சுகாதார துறையிலுள்ள எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது.

கிழக்கு மாகாணத்திற்கென தாதியர்களை கொண்டு வருவதற்கு கெஞ்சி கூத்தாட வேண்டியுள்ளது. இந்த நிலை ஏன் என நான் கேட்க விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாணத்திற்கென தனியான ஒரு தாதியர் கல்லூரியை உருவாக்கி தமிழ் மொழி மூலம் அவர்களுக்கு கற்பித்து இந்த மக்களுக்கு தமிழில் சேவையாற்றுகின்ற ஒரு தனியார் தாதியர் கல்லூரியை ஏன் நம்மால் உருவாக்க முடியாது.

அதை என்னால்  செய்யமுடியும். அதற்கு அனுமதி தாருங்கள் என நான் கேட்கின்றேன்.அதன் மூலம் வைத்தியசாலைகளில் தாதியர் பற்றாக்குறைவான பிரச்சினையை இல்லாமல் செய்ய முடியும்.

இது நாசாவுக்கு ரொக்கட் அனுப்புகின்ற பெரிய பிரச்சினையல்ல இந்த நாட்டில் ஒரு வைத்தியர் இலவசமாக கல்வி கற்கின்றார். அவர் கல்வி கற்று அவர் வைத்தியராக வெளியில் வந்த பின்னர் அவரின் மனோ நிலை மாறுகின்றது.

இது வைத்தியர்களின் பிரச்சினையல்ல. இந்த நாட்டிலுள்ள நிலைமை சட்டம் அவ்வாறுதான் இருக்கின்றது.

ஒரு வைத்தியசாலைக்கு ஒரு காவலாலியை போட் முடியாது. ஆளணியை நிவர்த்தி செய்ய முடியாது. இதற்கெல்லாம் இவர்களிடம் கை நீட்ட வேண்டியுள்ளது.

மக்களை ஏமாற்றுகின்ற அரசியல் அதிகார பகிர்வு என்கின்ற வார்த்தைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதை நாங்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும்.

யதார்த்தங்கள் பிழையாக சொல்லப்படுகின்ற போது அவைகளை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பிழை என அத்தனை வைத்தியர்களுக்கும் தெரியும். அவர்களின் நடடிவக்கை பிழை என அதிகமான வைத்தியர்களுக்கு தெரியும் ஆனால் அவர்கள் அதற்கு கட்டுப்பட்டுள்ளார்கள். அவர்கள் அதற்கு கட்டப்படமால் விட்டால் அவர்கள் ஒதுக்கப்பட்டவர்களாக மாற்றப்படுவார்கள்.

அரசியல் தலைமைகளும் வைத்திய நிபுhன்களும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும். பிரச்சினைகளை தீர்த்து வைக்க வைக்க வேண்டும்.

வைத்திய துறையை யாரும் செய்ய முடியாது. வைத்தி துறை என்பது மிகவும் முக்கியமானது.கதவை மூடிவிட்டு காலில் விழுந்து கெஞ்சிப் பெறுகின்ற நிலைமை தான் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபைக்கு இருந்தது.

அந்த நிலைமையை நாம் மாற்றியிருக்கின்றோம் . அரசியல் அதிகாரத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை போராடி பெற்று வருகின்றோம்.

கிழக்கு மாகாணத்தில் மிக முக்கிய மாகாண துறைகளில் ஒன்றான சுகாதார துறையை முன்னேற்ற நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றோம் என்றார்.