சர்வதேச அரிமா கழகத்தின் களுவாஞ்சிகுடி நகர அரிமா கழக கிளையின்; 19வது நிர்வாகத் தெரிவு

2017/2018 நிர்வாக ஆண்டிற்கான களுவாஞ்சிகுடி அரிமா கழகத்தின் 19வது நிர்வாகத்தெரிவு கடந்த 02.07.2017 அன்று களுவாஞ்சிகுடியில் 2016/2017 நிர்வாக ஆண்டின் களுவாஞ்சிகுடி நகர கிளைத் தலைவரும் 2017/2018 நிர்வாக ஆண்டின் Cabinet Officer Lion K.P.சாந்தசேனா  Zone chairman (zone 2, region-09)  அவர்களின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.


இந்நிகழ்வில் நிர்வாக பதிவு உத்தியோகத்தராகவும்பிரதம விருந்தினராகவும் 2017/2018  நிர்வாக ஆண்டின் Cabinet Officer Lion  P.R.பிரதாபன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். 2017/2018  நிர்வாக ஆண்டிற்கான தலைவராக Lion A..கந்தவேள் , செயலாளராக Lion N.சஞ்ஜீவ் , பொருளாளராக Lion P.பிரேமிதன் ஆகியோர் தெரிவு செய்ப்பட்டிருந்தனர்.

அத்தோடு இந் நிகழ்வில் 2017/2018  நிர்வாக ஆண்டின் Cabinet Officer Lion. T.நல்லையா மற்றும் கழகத்தின் மூத்த உறுப்பினர்களான Lion.R .ரஞ்சிதமூர்த்திLion .சாமித்தம்பி., Lion .தவச்செல்வம், Lion .ஆனந்தராஜா, Lion.சுந்தரேசன் ஆகியோரும் மற்றும் களுவாஞ்சிகுடி அரிமாக் கழக உறுப்பினர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

"நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட அரிமாக்கழகம் எமது பிரதேசத்திலும் சுமார் 18 ஆண்டுகளிற்கு முன்னர் சமூக அக்கறை கொண்டவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றது. எமது கிளை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்றுவரை எமது பிரதேச மக்கள் அவலங்களினை எதிர்நோக்கும் போதெல்லாம் மக்களிற்கு துணையாக நின்றுவருவது யாவரும் அறிந்த விடயமே. குறிப்பாக 2004ம் ஆண்டு சுனாமி பேரவலத்தின் போது சர்வதேச மட்டங்களில் இருந்து பல உதவிகளை எமது பிரதேச மக்களிற்கு பொற்றுக்கொடுத்தமையினை நினைவுகூரும் போது நானும் எமது கிளையின் ஓர் உறுப்பினர் என்பதனை நினைத்து பெருமிதம் அடைகின்றேன். அத்தோடு மட்டும் அல்லாமல் மக்களின் கல்விசுகாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு இன்றும் பல சேவைகளை செய்து வருகின்றோம். எமது களுவாஞ்சிகுடி நகரக் கிளை ஓர் அனுபவம்மிக்க கிளைபல சமூக அக்கறையாளர்களை கொண்ட கிளை எனவே அனைவரின் ஒத்துழைப்புடனும் எங்கழுடைய அரிமா கழகம் 306 -Cமாவட்டத்தின் ஆளுநர் தேசபந்து அசேல கருணாவர்த்தன அவர்களின் ஐந்து அம்ச திட்டங்களின் கீழ் பல சேவைகளை மக்களுக்கு வழங்கி மேலும் எமது கழகத்தினை திறம்படச்செய்வேன்" என  நிகழ்வில் களுவாஞ்சிகுடி நகர அரிமா கழகத்தின் 2017/2018  நிர்வாக ஆண்டின் தலைவர் Lion A..கந்தவேள் தெரிவித்திருந்தார்.