வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் பேராலயத்தின் மஹோற்சவ பெருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் இலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களிலுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இன்று வெள்ளிக்கிழமை (14)நண்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கிழக்கிலங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிவை ஒருங்கே கொண்ட ஆலயமாகவும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்திற்கு சிறப்பு பெற்றதாகவும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயம் உள்ளது. பிதிர்கடன்களை செலுத்துவது ஆடி அமாவாசையில் சிறப்பு என இந்து ஆகமங்கள் கூறியுள்ள நிலையில் ஆடி அமாவாசையில் பிதிர்கடன் செலுத்துவதற்கு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயத்திற்கு உலகெங்கும் இருந்து பெருமளவான அடியார்கள் கரந்துகொள்வது சிறப்பம்சமாகும். இராவணன் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா வினை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வெள்ளிக்கிழமை காலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரங்க வரதராஜ குருக்களின் தலைமையில் விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாகபூஜை,கும்பபூஜை,வசந்த மண்டப பூஜை என்பன நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொடிச்சீலைக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று கொடிச்சீலை உள்வீதியுலா எடுத்துவரப்பட்டு எழுந்தருளி மூர்த்தியுடன் கொடித்தம்பம் அருகில் கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றது. கொடிச்சீலைக்கு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடித்தம்பத்திற்கும் தம்ப விநாயகருக்கும் மூல மூர்த்திக்கும் பூஜைகள் நடைபெற்று அடியார்களின் ஆரோகரா கோசம் வானைப்பிளக்க மேள நாதஸ்வர இசை முழங்க வேத விற்பன்னர்கள் வேதபராயணம் செய்ய கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் பிற்பகல் மாலை திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை இரதோற்சவமும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

இலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயங்களிலுல் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு,அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ இன்று வெள்ளிக்கிழமை (14)நண்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

கிழக்கிலங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிவை ஒருங்கே கொண்ட ஆலயமாகவும் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்திற்கு சிறப்பு பெற்றதாகவும் ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயம் உள்ளது.

பிதிர்கடன்களை செலுத்துவது ஆடி அமாவாசையில் சிறப்பு என இந்து ஆகமங்கள் கூறியுள்ள நிலையில் ஆடி அமாவாசையில் பிதிர்கடன் செலுத்துவதற்கு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயத்திற்கு உலகெங்கும் இருந்து பெருமளவான அடியார்கள் கரந்துகொள்வது சிறப்பம்சமாகும்.

இராவணன் வழிபட்ட ஆலயமாக கருதப்படும் மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் பேராலயத்தின் வருடாந்த மஹோற்சவ பெருவிழா வினை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு வீரகத்திப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ இரங்க வரதராஜ குருக்களின் தலைமையில் விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட யாகபூஜை,கும்பபூஜை,வசந்த மண்டப பூஜை என்பன நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து கொடிச்சீலைக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று கொடிச்சீலை உள்வீதியுலா எடுத்துவரப்பட்டு எழுந்தருளி மூர்த்தியுடன் கொடித்தம்பம் அருகில் கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றது.

கொடிச்சீலைக்கு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் கொடித்தம்பத்திற்கும் தம்ப விநாயகருக்கும் மூல மூர்த்திக்கும் பூஜைகள் நடைபெற்று அடியார்களின் ஆரோகரா கோசம் வானைப்பிளக்க மேள நாதஸ்வர இசை முழங்க வேத விற்பன்னர்கள் வேதபராயணம் செய்ய கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

கொடியேற்றத்தினை தொடர்ந்து கொடித்தம்பத்திற்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்றதுடன் அடியார்களுக்கும் ஆசிர்வாதம் வழங்கப்பட்டது.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் பிற்பகல் மாலை திருவிழாக்கள் நடைபெறவுள்ளதுடன் எதிர்வரும் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை இரதோற்சவமும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் ஆடிஅமாவாசை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.