மண்டூர் கூமாவடி-துறையடி வீதி சேதமடைந்த நிலையில்...

போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட மண்டூர் கூமாவடி-துறையடி வீதியில் உள்ள மதகு நீண்ட நாட்களாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.இதன் காரணமாக இவ்வீதியால் பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை அனுபவித்து வருவதோடு பல வீதி விபத்துக்களும் இடம்பெற்று வருகின்றன.இது சம்பந்தமாக போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு சங்கங்கள் மூலம் அறிவித்தல் விடுத்தும் எதுவித ஆக்க பூர்வமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவது அரச அதிகாரிகளின் கடமையாகும்.கடந்த காலங்களில் இவ்வீதியானது முதற்தடவையாக கொங்கீறிற் வீதியாக செப்பனிடப்படும் போது சிறந்த முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாமையே இம் மதகு  சேதமடைவதற்கு பிரதான காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் மிகவிரைவில் இதனை சீர்செய்து தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.