(லியோன்)
மண்முனை வடக்கு பிரதேச
செயலக மட்டத்தில்  சமுர்த்தி
சமுதாய அடிப்படை அமைப்பாக செயல்படுவதற்கான
 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் கூட்டம்  இன்று நடைபெற்றது
 
தேசிய சமுர்த்தி சட்டத்திற்கு இணங்க பொருளாதார
அபிவிருத்தி ஊக்குவிப்பு செயல்திட்டத்தின்
கீழ் தனிநபர் ,குடும்பம் ,குழு , சமுதாயம் என்ற அடிப்படையில் முன்னுரிமை வழங்கவும்
, வறுமையை ஒழிப்பதற்காகவும் , சமூக நீதியை உறுதி படுத்துவதற்குமான தேசிய கொள்கையை
வலுவூட்டும் செயல்திட்டத்தின் தேசிய
மட்டத்தில் ஒருங்கிணைப்பு வலையமைப்பினை ஏற்படுத்துவதற்காவும்  செயல்திட்டங்கள் நாடளாவிய ரீதியில்
செயல்படுத்தப்பட்டு வருகின்றன .
இதற்கு அமைய கிராமங்களில் செயல்பட்டு வந்த சமுர்த்தி
சங்கங்களின் உறுப்பினர்களின் ஊடாக பிரதேச செயலக மட்டத்தில்  சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பாக  செயல்படுவதற்கான  உறுப்பினர்கள் தெரிவு செய்யும் கூட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே. குணநாதன் தலைமையில்
மண்முனை வடக்கு பிரதேச செயலக செயலகத்தில் 
நடைபெற்றது
சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கான  உறுப்பினர்கள் தெரிவு செய்யும்  கூட்டத்தில் மண்முனை  வடக்கு  வாழ்வின்  எழுச்சி அபிவிருத்தி திணைக்கள முகாமைத்துவ  பணிப்பாளர்   திருமதி . கிரிதராஜ்  நிர்மலா , மண்முனை வடக்கு  வாழ்வின்  எழுச்சி
 அபிவிருத்தி திணைக்கள முகாமையாளர் திருமதி. செல்வி வாமதேவன்  ,மண்முனை வடக்கு  திவிநெகும  திணைக்கள வலய வங்கி முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி
உத்தியோகத்தர்கள்  மற்றும் மண்முனை வடக்கு வலய  சமுதாய அடிப்படை வங்கிகளின் சமுர்த்தி  பயனாளிகள் கலந்துகொண்டனர்